Posts

சிறப்பு பயான் நிகழ்ச்சி 31-05-2023 மகாராஜபுரம்

Image
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் (31.05.2023) புதன் கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி  சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.... மௌலவி ஷவ்கத் அலி உஸ்மானி ஹஜ்ரத்”அவர்கள்  சமூகத்தின் சமகால நிலை குறித்தும், சமூகத்தில் பெண்களின் பொறுப்பும், அவர்களின் முக்கியத்துவமும் குறித்து உரையாற்றினார்கள். 2022-2023ம் கல்வியாண்டில் நடைபெற்ற +12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்கூல் அளவில் முதல் மதிப்பெண்  பெற்று நமது ஊருக்கு பெருமிதம்  சேர்ந்த மாணவிகளுக்கு பரிசுகளும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த சிறிய முயற்சியை பொருத்திக் கொள்வாயாக.... ஆமீன்.... இதனை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி தந்த  அனைவருக்கும் அல்லாஹ் நற்க்கூலியினை தந்தருள்வானாக.... ஆமீன்.....   வஸ்ஸலாம்......

மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி SDPI கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

Image
விருதுநகர் மாவட்டம் மகாராஜாபுரம் மற்றும் தம்பிபட்டி கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று (24-03-2018) நடைபெற்றது. இதை RO வாக  இருந்து Advocate M. முகமது ஷாஜஹான் அவர்கள் நடத்தி வைத்தார்கள். இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் விவரங்கள் பின்வருமாறு.. மகாராஜாபுரம் நிர்வாகிகள் தலைவர்: M. அபுபக்கர் சித்தீக் செயலாளர்: J. முஜிபுர் ரஹ்மான் பொருளாளர்: S. அப்துல் குத்தூஸ் தம்பிபட்டி நிர்வாகிகள் தலைவர்: A. அஹமது காசிம் செயலாளர்: A. ஒலியுல்லாஹ் பொருளாளர்: K. திவான் மைதீன் இவர்களுடைய சமுதாயப் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்! புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஜபுரம் கிளை SDPI நிர்வாகிகள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிபட்டி கிளை SDPI நிர்வாகிகள்

VHP ரதயாத்திரையைக் கண்டித்து கூமாப்பட்டி மற்றும் மகாராஜபுரம் SDPI கட்சி வத்திராயிருப்பில் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

Image
ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர், மற்ற இயக்க கட்சி தலைவர்கள் கைதை கண்டித்தும் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சி  சார்பில் 50 க்கு மேற்பட்டோர் சாலை மறியல். மறியலில் ஈடுபட்டவர்கள் கைது. செய்தி: அஹமது காசிம், SDPI கிளைச் செயலாளர், மகாராஜபுரம் வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் பண்ணவும் https://youtu.be/kXg1UoKdWt4

சிறப்புற நடைபெற்ற பெண்கள் பயான் | TNTJ

Image
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் MTK புரம் கிளையின் சார்பாக வாரந்தோறும் நடைபெற்று வரும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் இன்று( 18.03.18 ) மாலை 7:15 முதல் 8:15 மணி வரை தம்பிபட்டி பகுதியில் பெண்கள் பயான் சிறப்பாக நடைபெற்றது. இப்பெண்கள் பயான் நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட துணைச்செயலாளர் சகோதரர் அப்பாஸ் பீர் அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்" என்கிற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்! செய்தி : சகோ. அப்பாஸ், கிளைத் தலைவர்

மார்க்க சொற்பொழிவு - PFI மகாராஜபுரம்

Image
ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால் விருதுநகர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரான்ட் ஆஃப் இந்தியாவின் தர்பியாதுறையின் சார்பாக 24-2-2018 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி தம்பிபட்டி யூனிட் சார்பாக மகாராஜபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. செய்தி : காசிம், மகாராஜபுரம் SDPI கிளைச் செயலாளர்

மகவையில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் - பிப்ரவரி 17, 2018

Image
பிப்ரவரி 17, 2018 அன்று மகாராஜபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் PFI கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இதில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மக்களுடன் PFI - மக்களை சந்தித்து பிரச்சாரம் - MTK Puram

Image
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தம்பிபட்டி நகர் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெற்ற மக்களை சந்திக்கும் பணி.! கிளைத் தலைவர் சகோ. சித்தீக் அவர்களின் தலைமையில் மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரம் வழங்கப்படது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தம்பிபட்டி யூனிட் , MTK Puram விருதுநகர் மாவட்டம் .