Posts

Showing posts from November, 2017

கூமாப்பட்டியில் கனமழை

Image
8 ஆண்டுக்கு பின்பு கூமாபட்டியில் நேற்று (30-11-2017) கனமழை பெய்தது. கோவிந்த மேட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. படங்கள் உதவி: மவ்லவி பிலால் ஹஜ்ரத் & மீரான் வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் https://youtu.be/wwWa30FTv88 https://youtu.be/wwWa30FTv88

மீலாது பயான் - MTK புரம்

Image
ரபிய்யுல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மகாராஜபுரம், தம்பிபட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய மூன்று ஊர்களிலும் உள்ள ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு நாளும் தெரு பயான் நடைபெற்று வருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொருட்டு, இந்த நிகழ்வை லஜ்னத்துல் இஹ்ஸான் உலமா சபை உலமாக்கள் முன்னின்று நடத்தி வருகிறார்கள். இதில் O.M.அமானுல்லாஹ் ஹஜ்ரத், கே. ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி, மகாராஜபுரம் பள்ளிவாசல் இமாம் மௌலவி ஷாகுல் ஹமீது ஹஜ்ரத், வலியுல்லாஹ் ஹஜ்ரத், தம்பிபட்டி பள்ளிவாசல் இமாம் மௌலவி ஸுஜா ஹஜ்ரத், ஜமீல் பைஜி ஹஜ்ரத் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கு பயான் செய்து வருகிறார்கள். பணத்தோட்டம், ஆஸாத் நகர், முஸ்லிம் தெரு, தம்பிபட்டி, கிருஷ்ணாபுரம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெருவில் பயான் நடைபெற்று வருகின்றது. மக்கள் திரளாகக் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.

மகாராஜபுரம் SDPI கிளை - நிலவேம்புக் கசாயம் விநியோகம்

Image
மாகாராஜபுரம் SDPI கிளையின் சார்பாக இன்று (15-11-2017) ஊர் மக்களுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதை மகாராஜபுரம் SDPI கிளைத் தலைவர் காசிம் அவர்களின் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பான முறையில் நடத்தி முடித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!