Posts

Showing posts from March, 2018

மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி SDPI கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

Image
விருதுநகர் மாவட்டம் மகாராஜாபுரம் மற்றும் தம்பிபட்டி கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று (24-03-2018) நடைபெற்றது. இதை RO வாக  இருந்து Advocate M. முகமது ஷாஜஹான் அவர்கள் நடத்தி வைத்தார்கள். இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் விவரங்கள் பின்வருமாறு.. மகாராஜாபுரம் நிர்வாகிகள் தலைவர்: M. அபுபக்கர் சித்தீக் செயலாளர்: J. முஜிபுர் ரஹ்மான் பொருளாளர்: S. அப்துல் குத்தூஸ் தம்பிபட்டி நிர்வாகிகள் தலைவர்: A. அஹமது காசிம் செயலாளர்: A. ஒலியுல்லாஹ் பொருளாளர்: K. திவான் மைதீன் இவர்களுடைய சமுதாயப் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்! புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஜபுரம் கிளை SDPI நிர்வாகிகள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிபட்டி கிளை SDPI நிர்வாகிகள்

VHP ரதயாத்திரையைக் கண்டித்து கூமாப்பட்டி மற்றும் மகாராஜபுரம் SDPI கட்சி வத்திராயிருப்பில் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

Image
ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர், மற்ற இயக்க கட்சி தலைவர்கள் கைதை கண்டித்தும் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சி  சார்பில் 50 க்கு மேற்பட்டோர் சாலை மறியல். மறியலில் ஈடுபட்டவர்கள் கைது. செய்தி: அஹமது காசிம், SDPI கிளைச் செயலாளர், மகாராஜபுரம் வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் பண்ணவும் https://youtu.be/kXg1UoKdWt4

சிறப்புற நடைபெற்ற பெண்கள் பயான் | TNTJ

Image
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் MTK புரம் கிளையின் சார்பாக வாரந்தோறும் நடைபெற்று வரும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் இன்று( 18.03.18 ) மாலை 7:15 முதல் 8:15 மணி வரை தம்பிபட்டி பகுதியில் பெண்கள் பயான் சிறப்பாக நடைபெற்றது. இப்பெண்கள் பயான் நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட துணைச்செயலாளர் சகோதரர் அப்பாஸ் பீர் அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்" என்கிற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்! செய்தி : சகோ. அப்பாஸ், கிளைத் தலைவர்